7 இலட்சம் செயலிகளை அழித்த கூகுள்

7 இலட்சம் செயலிகளை அழித்த கூகுள்

தற்போது எண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவே செயலிகளை பதிவிரக்கம் செய்து வருகிறார்கள். இதில் கிடைக்கும் செயலிகளில் 90 சதவிகிதம் இலவசமாக கிடைக்கிறது.

இது பயன்படுத்த எளிதாக இருப்பதால் உலகம் முழுக்க பலரும் இதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். கூகுளுக்கு இதன் காரணமாக மிகவும் அதிகபட்ச வருமானம் கிடைக்கிறது.

தற்போது கூகுளின் பிளே ஸ்டோரில் இருந்து 7 லட்சம் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் உள்ள அனைத்து செயலிகளும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதை பதிவிரக்கம் செய்வதற்கு முன்பே கூகுள் நீக்கி உள்ளது. பதிவிரக்கம் செய்யப்பட செயலிகளை செயல் இழக்கவைத்துள்ளது.

செயலிகளை எப்படி நீக்கினார்கள் ?

cnvploytcpxgvxlkosbk.jpg

செயலிகளை நீக்குவதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்கள். கூகுளில் விதிமுறைகளை பின்பற்றாத செயலிகளை இது உடனடியாக கண்டுபிடித்து அதை எளிதாக நீக்கிவிடும். 2017இல் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

செயலிகளை அழிப்பதன் காரணம் என்ன ?

secret-of-mobile-apps-1132x670.jpg

இதில் பல செயலிகள் போலி ஆகும். மேலும் சில தொலைபேசி பாதிக்க கூடிய வகையில் இருந்துள்ளது. இன்னும் சில செயலிகள் பயனாளர்களின் தகவல்களை திருடும் வகையில் இருந்துள்ளது.

மென்பொறியாளர்கள்

அதேபோல் 1 லட்சம் செயலி டெவலப்பர்கள் இதன் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மின்னஞ்சல் மூலம் ஏற்றப்படும் எந்த செயலிகள் இனி கூகுளில் இடம்பெற முடியாது. அவர்கள் வேறு மின்னஞ்சல் மூலம் வருவதை தடுக்கவும் வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படடுகின்றது.

மூலம்: ஒன்இந்தியா

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top