ரங்கன ஹேரத் உலக சாதனை

ரங்கன ஹேரத் உலக சாதனை

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களைப் கைப்பற்றிய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இனிங்சில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் ஹேரத் 415 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (414) கைப்பற்றிய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள இடது கை பந்துவீச்சாளர்கள்

ரங்கன ஹேரத் - 415

வசித் அக்ரம் - 414

டேனியல் விட்டோரி - 362

சமிந்த வாஸ் - 355 

மிச்சல் ஜோன்சன் - 313

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top