இரண்டாவது டெஸ்ட்டை சாதனையுடன் வெற்றிக்கொண்டது இலங்கை

இரண்டாவது டெஸ்ட்டை சாதனையுடன் வெற்றிக்கொண்டது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 339 ஓட்டங்களை வெற்றியிலக்காகக்   கொண்டு தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

100 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இருந்த பங்களாதேஷ் அணி இறுதி ஐந்து விக்கெட்டுக்களையும் வெறும் 23 ஓட்டங்களுக்குள் இழந்தது. பங்களாதேஷ் சார்பாக மொமினுல் ஹக் மாத்திரமே 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அந்த அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக இன்று காலை தமது இரண்டாவது இனிங்சை இரண்டு விக்கெட்டுகள் கைவசமிருக்க தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி தமது முதல் இனிங்சில் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top