இலஞ்சம், ஊழல், மோசடிக்கு ஏதிரான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

இலஞ்சம், ஊழல், மோசடிக்கு ஏதிரான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

லஞ்சம், ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களுக்கெதிரான விரிவான மக்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப, அனைத்து மக்களினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் செயற்திறமான பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுபீட்சமான புதியதோர் யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் வகையில் ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் வீண்விரயங்களுக்கெதிரான விரிவான அரசியல் மற்றும் சமூக கலாசாரத்தை கட்டியெழுப்புதல், ஆட்சிமுறைமையை வலுப்படுத்தல், சட்ட முறைமையையும், சட்ட நிறுவனங்களையும் முறைப்படுத்துதல் ஆகியன மேற்கொள்ளப்படும்.

இலங்கை தேசத்தின் தற்போதைய சவால்கள் குறித்த தெளிவுடன் நவீன தேசமாக எழுந்திருப்பதற்குத் தேவையான சக்தியை வழங்கி ஊழல், மோசடியற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் வீண்விரயங்களை நாட்டிலிருந்து ஒழித்து நாட்டை சுபீட்சமானதொரு தேசமாக கட்டியெழுப்பும் மக்கள் அரணின் ஒரு தூணாக இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக தமது பெறுமதியான கருத்துக்கள், முன்மொழிவுகளை 2018 மார்ச் மாதம் முதலாம்; திகதிக்கு முன்னர் 'ஊழலுக்கெதிரான தேசிய நிகழ்ச்சித் திட்டம்', ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு - 1 என்ற முகவரிக்கு அல்லது 011 2431502 என்ற தொலைநகலின் ஊடாகவோ அல்லது ணநசழஉழசசரிவழைnளூpசநளனைநவெளழககiஉந.டம என்ற மின்னஞ்சலினூடாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top