நாட்டில் வெகுவிரைவில் மின் பஞ்சம் ஏற்படலாம்

நாட்டில் வெகுவிரைவில் மின் பஞ்சம் ஏற்படலாம்

இலங்கையில் மின் விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படலாம் துறைசார் பொறியிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீரில் முன்னெடுக்கப்படும் மின்சார உற்பத்தி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஏதாவது ஓர் கட்டத்தில் மின் ஆலை மின்சாரம் தயாரிப்பதனை நிறுத்தினால் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அவசர தேவையின் போது பயன்படுத்துவதற்கு மேலதிக மின்சாரம் தயாரிக்கும் இடம் இல்லாமல் உள்ளது. இதற்கு தேவையான திட்டத்தை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதனை செயற்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வறட்சியான காலநிலை தொடர்ந்து காணப்பட்டால் மார்ச் மாதம் இறுதியில் இருந்து மின்சார நெருக்கடி ஏற்பட கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை பெறியியலாளர்கள் சமர்ப்பித்துள்ள 2018 - 2037 திட்டத்தை செயற்படுத்துமாறு கோரி பொறியியலாளர்கள் தொழில்நுட்ப கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை எனவும், இதனால் அவசர மின்சார கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடியை கருத்திற் கொண்டு அதிகாரிகள் உடனடியாக பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என அந்த சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top