பிரதேசசபை உபதலைவருக்கு 15 வரை மறியல் நீடிப்பு

பிரதேசசபை உபதலைவருக்கு 15 வரை மறியல் நீடிப்பு

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சந்திரசிறி முனசிங்கவை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிபிட்டிய பதில் நீதவான் டி.எஸ்.பி.தசநாயக உத்தரவிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரை தாக்கி காயத்திற்குள்ளாக்கியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபரினால் தாக்கப்பட்ட நபர் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குட்டிகல பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஹிங்குர வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top