மஹிந்த – மைத்திரி இணைந்து புதிய அரசாங்கம்; தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி

மஹிந்த – மைத்திரி இணைந்து புதிய அரசாங்கம்; தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி

மஹிந்த ராஜபக்சவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் 11 இலங்க தொழிலாளர் காங்கிரஸ் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பு ஒன்று ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், “நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பலத்தினை பெற்று தமது சக்தியை வெளிப்படுத்தி நாடளாவிய ரீதியில் மக்களின் ஆதரவை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்கான முடிவினை தக்க தருணத்தில் ஆறுமுகன் தொண்டமான் எடுத்துள்ள முடிவு சரியானது அதனை வரவேற்கின்றோம்.

சுயலாபம் கருதாமல் மலையகத்தில் வாழ்கின்ற குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட நகர் மற்றும் கிராம பகுதி மக்களின் பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு காத்திரமான கொள்கையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுவதற்காக இவ்வாறு கைகோர்த்துள்ளமை வரவேற்கதக்க ஒன்றாகும்.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களினால் குறிப்பிடதக்க அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட்ட இ.தொ.கா மஹிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்து அபிவிருத்திகளை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தனது ஆதரவை வழங்கும்.

எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேவேளை தோட்டப்பகுதிகள், கிராம பகுதிகள், நகர் பகுதிகள் என அபிவிருத்திகள் செய்யப்படுவதோடு, உருவாக்கப்படும் நல்லாட்சியில் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான அமைச்சும் வழங்கப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top