உதயமாகியது “தமிழ்த் தேசிய பேரவை“ கூட்டணி

உதயமாகியது “தமிழ்த் தேசிய பேரவை“ கூட்டணி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. “தமிழ்த் தேசிய பேரவை“ என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

“தமிழ் மக்கள் பேரவையினால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த் தேசியப் பேரவை) செயற்படும்.

எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளமையினால் மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடும்.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியப் பேரவை எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.

இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ள முடியும்.

ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம், மற்றும் பொது அமைப்புக்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top