இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி; மோடி பெருமிதம்

இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி; மோடி பெருமிதம்

“இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் உள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர  மோடி 4 நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதியாக  ஓமானிய நகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஓமான்-இந்தியா வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓமான் துணைப் பிரதமர் எச்.எச்.சையத் ஆசாத் பின் தாரிக் சைத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் 125 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்கு சென்று மோடி வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து, ஓமான் நாட்டு மற்றொரு துணைப் பிரதமர் சையத் பாத் பின் மஹ்மூத் அல் சைத்தை மோடி சந்தித்தார். அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயற்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இராணுவ ஒத்துழைப்பு, சுற்றுலா, சுகாதாரம், கல்வி உட்பட 8 துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top