சர்ச்சையில் சிக்கிய வடகொரிய உற்சாகமூட்டும் பெண்கள்

சர்ச்சையில் சிக்கிய வடகொரிய உற்சாகமூட்டும் பெண்கள்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படை தாங்கள் அணிந்திருந்த முடிமூடி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது.

முகமூடியில் இருக்கும் நபர் வட கொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும், வட கொரியாவின் முதல் தலைவருமான கிம் இல்-சூங் போல இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரியா இந்த போட்டிகளை தனது பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வதாகத் தென் கொரியாவில் உள்ள பழமைவாத குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்திற்கு எதிரான கூட்டு கொரிய அணியின் பெண்கள் ஐஸ் ஹொக்கி போட்டியின்போது, முடிமூடி அணிந்த உற்சாகமூட்டும் பெண்கள் படை தோன்றியது.

கொரிய அணியை 0-8 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வீழ்த்திய இப்போட்டியை, பல உயர் விருந்தினர்கள் கண்டுகளித்தனர்.

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன், வட கொரிய தலைவரின் சகோதரி கிம் யோ-ஜாங், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் தேமாமஸ் பாக் உள்ளிட்டோர் இப்போட்டியைப் பார்வையிட்டனர்.

''அழகிய படை'' என அழைக்கப்படும் இந்த பெண்கள், கிம் இல்-சூங்கின் முகம் கொண்ட முகமூடியை அணிந்து உற்சாகமூட்டிக்கொண்டிருந்தனர் என தென் கொரிய ஊடக நிறுவனமான நோகட் நியூஸ் தெரிவித்துள்ளது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top