ஆரம்பமானது ‘நாடோடிகள் 2’

ஆரம்பமானது ‘நாடோடிகள் 2’

2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான படம் ‘நாடோடிகள்’. இயக்குனர் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. சசிகுமாருடன், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ் போன்றோர் நடித்திருந்தனர்.

தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியே இயக்கவுள்ள இப்படத்தை ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கவுள்ளார். இதிலும் ஹீரோவாக சசிகுமார் நடிக்கவுள்ளார்.

சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி, அதுல்யா ரவி நடிக்கின்றனர். மேலும், ‘பிக் பாஸ்’ புகழ் பரணி, நமோ நாராயணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top