கமலின் “நாளை நமதே”

கமலின் “நாளை நமதே”

சமீப காலமாகவே நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை டிவிட்டரில் வெளியிடடு வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘MஅஐஅM ஙிஏஐகுகூஃஉ’ என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். மேலும், தான் அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளை மிக தீவிரமாகச் செய்து வருவதாக தெரிவித்தார்.

சமீபத்தில், கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் “மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளேன். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி. இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ஆம் திகதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தைத் ஆரம்பிக்கவுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது, தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என கமல்ஹாசன் பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசியல் பயணத்தின் முதல் கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top