100 படங்கள், 125 பாடகர்கள்; இமான் பெருமிதம்

100 படங்கள், 125 பாடகர்கள்; இமான் பெருமிதம்

இசை அமைப்பாளர் இமான் இசை அமைத்துள்ள 100வது படம் “டிக் டிக் டிக்”. 100 படங்களுக்கு இசை அமைத்திருப்பது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது 100 படங்களில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

இசையை பல ஆசியிர்களிடம் முறையாக கற்றேன். கீபோர்ட் பிளேயராக வாழ்க்கையை தொடங்கினேன். 200க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு இசை அமைத்தேன். கிருஷ்ணதாஸி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி 100 தொடர்களுக்கு மேல் இசை அமைத்தேன். 2002ம் ஆண்டு “காதலே சுவாசம்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அந்தப் படம் வெளிவரவில்லை. “தமிழ்” எனது முதல் படமாக அமைந்தது. இப்போது “டிக் டிக் டிக்” எனது 100வது படம்.

எனது இந்த இசை பயணத்தில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். சின்ன படம், பெரிய படம், நல்ல படம் கெட்ட படம் என்ற பாகுபாடு இல்லாமல் பணியாற்றி இருக்கிறேன். லைப் ஆர்க்கெஸ்ட்ராவையே பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கீழ் 100 பேர் வேலை செய்கிறார்கள். யாருக்கும் ஒரு ரூபாய் சம்பள பாக்கி வைத்ததில்லை.

நான் பாடுவதற்கு யாரிடமும் சம்பளம் வாங்கியதில்லை. இன்று 100 படங்கள், நாளை ஆயிரம் படங்கள் என்ற பேராசை கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் கனணியில், தொலைபேசியில் இமானுக்கென்று தனி போல்டர் உருவாக்க வேண்டும். அதில் காலத்தை வென்ற 100 பாடல்கள் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. என்றார் கூறியுள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top