ரஜினி,கமல்,விஜயுடன் இணையும் ஜெயமோகன்

ரஜினி,கமல்,விஜயுடன் இணையும் ஜெயமோகன்

விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்கவுள்ளார்.

1996ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்திருந்தார். முதலாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து,  இரண்டாம் பாகத்திலும்  கமல்ஹாசனே  ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

தற்போது, படத்திற்கு வசனம் எழுத ஜெயமோகன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘2.0’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘விஜய் 62’ விற்கும் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top