நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்; சூர்யா

நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்; சூர்யா

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து செல்வராகவன் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் புதிய படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படம் சூர்யாவின் 37வது படம்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், இச்செய்தி குறித்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரண்டு தொகுப்பாளினிகள் “சிங்கம் படத்தில் அனுஷ்காவுடன் நடித்தபோதே சூர்யா ஹீல்ஸ் போட்டு தான் நடித்தார். அப்படி இருக்கையில், அமிதாப் பச்சனுடன் நடிக்கும்போது சூர்யா ஸ்டூல் போட்டுதான் நடிக்க வேண்டும்” என்று சூர்யாவை நேரடியாக கேலிசெய்துள்ளனர்.

இல் சூர்யா ரசிகர்களும், சில திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் முன் சூர்யாவின் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என பதிவிட்டுள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top