வெளிநாட்டு நேரடி முதலீடு 1.63 பில்லியன் டொலராக அதிகரிப்பு

வெளிநாட்டு நேரடி முதலீடு 1.63 பில்லியன் டொலராக அதிகரிப்பு

கடந்த ஆண்டு நாட்டுக்கு 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றிருப்பதாக, இலங்கை முதலீட்டுச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நாட்டிற்கு 802 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்திருந்தன. கடந்த ஆண்டு இது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கிடைத்ததே , இதுவரையில் ஒரு ஆண்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடாகவும் அமைந்துள்ளது.

2014ஆம் ஆண்டு கிடைத்த ஆகக் கூடுதல் வெளிநாட்டு நேரடி முதலீடான 1.61 பில்லியன் டொலரையும் இது தாண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 2020 ஆண்டு நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீட்டை 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாகவும், இந்த வருடம் 2.5 பில்லியன் டொலர் முதலீட்டை எதிர்ப்பார்ப்பதாகவும்  சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக்க  சமரவிக்ரம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top