கட்டார் - இலங்கை இடையே 73 மி.அமெரிக்க டொலர் வர்த்தக நடவடிக்கை

கட்டார் - இலங்கை இடையே 73 மி.அமெரிக்க டொலர் வர்த்தக நடவடிக்கை

கட்டார் மற்றும் இலங்கைக்கிடையில் 73 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் இடம்பெற்றிருப்பதாக கட்டார் வர்த்தக சபையின் துணைத் தலைவர் மொஹமட் பின் டவார் அல் குவாரி தெரிவித்துள்ளார்.

"கட்டாரில் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் கட்டாரிலுள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் வர்த்தகசபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தெற்கு ஆசியாவில் இலங்கையை மூலோபாய பங்குதாரராக தமது நாடு கருதிக்கொள்வதாகக் குறிப்பிட்ட துணைத் தலைவர், 2 நாடுகளும் பல்வேறு உடன்படிக்கைகளிலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால், அதன்மூலமான பெறுபேறுகள் இரு நாடுகளுக்கும் பெருமளவில் காணப்படக்கூடியதாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top